Saturday, 3 February 2024

புத்தாக்க பரிசு

 "துண்டு"👳🏻‍♀️அன்று ஆதிக்கத்தின் அடையாளமாகவே அது இருந்தது. செல்வந்தர்கள் தோளிலும், தன்னை ஆதிக்க சக்தியாக எண்ணிக்கொண்டவர்கள் தோளிலும் ஏறி அலங்கரித்த துண்டு ஏனோ பாமரனின் இடுப்புக்கு மேலே ஏற மறுத்தது😢. அதிசயமாய் ஒரு படி மேலே போய் ஆண்டைகளை பார்க்கையில், கக்கத்தில் தஞ்சம் கொண்டது. 

அனைவரின் தோளிலும் சரிக்கு சமமாய் துண்டு ஏற வேண்டும், இங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்ற சமூக நீதி பார்வையோடும், திராவிட சிந்தனையோடும் ஆரமிக்கப்பட்டதே எளியோர்க்கு வலியோரும், வலியோர்க்கு எளியோரும் துண்டு போடும் வழக்கம்🤝🏻. 

அந்த துண்டு சமூகநீதி காத்ததோடு மட்டுமல்லாமல், கைத்தறி நெசவாளர்களின் குடும்பங்களையும் பசியிலிருந்து காத்தது. 

இன்றைய சூழலில் நூல்களால்🧵 கோர்க்கபட்ட துண்டை விட, பல துண்டு சீட்டுகளால் கோர்க்கபட்ட நூலே📚 சமூகநீதி காக்கும். கல்வியறிவாலே சமத்துவம் பிறக்கும். 

புத்தாக்க பரிசு

 "துண்டு"👳🏻‍♀️அன்று ஆதிக்கத்தின் அடையாளமாகவே அது இருந்தது. செல்வந்தர்கள் தோளிலும், தன்னை ஆதிக்க சக்தியாக எண்ணிக்கொண்டவர்கள் தோளி...